Govt Primary School Breakfasts Lizard - 13 Children Hospitalised - அரசு தொடக்கப்பள்ளி காலை உணவில் பல்லி - 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
மாணவர்கள் உணவை உண்ட நிலையில், அதில் பல்லி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சமத்துவபுரம் கிராம அரசு தொடக்கப் பள்ளியில் பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 13 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு நேற்று காலை வழக்கம்போல, சேமியா உப்புமா சமைத்து வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் உணவை உண்ட நிலையில், அதில் பல்லி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட தொடக்க பள்ளி ஆசிரியர்கள், சமையலரிடம் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.