தென்னை வளர்ச்சி வாரியம் - தென்னை மரமேறுபவர்களுக்கான அழைப்பு மையத்தை (Call Centre) நிறுவுகிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 18, 2024

Comments:0

தென்னை வளர்ச்சி வாரியம் - தென்னை மரமேறுபவர்களுக்கான அழைப்பு மையத்தை (Call Centre) நிறுவுகிறது

தென்னை வளர்ச்சி வாரியம் - தென்னை மரமேறுபவர்களுக்கான அழைப்பு மையத்தை (Call Centre) நிறுவுகிறது Coconut Development Board - Establishes a call center for coconut growers தென்னை வளர்ச்சி வாரியம்

வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகம், இந்திய அரசு

CARD INDIA

மண்டல அலுவலகம்

எண்.47, F1, டாக்டர். இராமசாமி சாலை, கே.கே நகர், சென்னை-78

Phone: 044-2366 2684/3685-Email: ro-chennai@coconutboard.gov.in

Website-www.coconutboard.gov.in

தென்னை வளர்ச்சி வாரியம்

தென்னை மரமேறுபவர்களுக்கான அழைப்பு மையத்தை (Call Centre) நிறுவுகிறது தென்னை வளர்ச்சி வாரியம் ஒரு அழைப்பு மையத்தை(Call Centre) நிறுவுகிறது, இது 'தென்னை மரமேறும் நண்பர்கள் (FOCT) திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற திறமையான தென்னை மரமேறுபவர்களை (தென்னை மரமேறும் நண்பர்கள்- FoCT) கொண்டு தென்னை உற்பத்தியாளர்களின் பயிர் பாதுகாப்பு, அறுவடை மற்றும் இதர பண்ணை செயல்பாடுகளில், தேவைகளைப் பூர்த்தி செய்யும். கேரளாவில் உள்ள அழைப்பு மையம் (Call Centre) கொச்சியில் உள்ள வாரியத்தின் தலைமையகத்தில் செயல்படுகிறது.

கேரளாவைத் தவிர, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய பாரம்பரிய தென்னை வளரும் மாநிலங்களில், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள வாரியத்தின் அலுவலகங்கள் மூலம் அழைப்பு மையம் (Call Centre) இணையாகத் தொடங்கப்படும். இந்த அழைப்புமையத்தில் (Call Centre) மொத்தம் 1552 தென்னை மரமேறும் நண்பர்கள் பதிவு செய்துள்ளனர்.

தென்னை மரம் ஏறுதல், மரங்களை பாதுகாத்தல், அறுவடை செய்தல், விதைக் காய்கள் கொள்முதல், நாற்றங்கால் மேலாண்மை போன்ற தென்னை சாகுபடி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஒன்றிய கிராம பஞ்சாயத்து அளவில் தென்னை மரமேறும் நண்பர்களின் (FoCT) சேவைகள் கிடைக்கும்.


தென்னை மரமேறும் நண்பர்களை (FoCT), தென்னை விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள், தென்னை தொழில்முனைவோர் மற்றும் பல்வேறு விவசாயத் துறைகள்/நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இணைப்பதன் மூலம் தென்னைத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதே இந்த அழைப்பு மையத்தின் (Call Centre) நோக்கமாகும். மேலும் விவரங்களுக்கு 044 23662684 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தவிர ஆர்வமுள்ள திறமையான தென்னை மரமேறுபவர்களும் இந்த அழைப்பு மையத்தில் (Call Centre) பதிவு செய்யலாம். இது தொடர்பாக 8848061240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது பெயர், முகவரி, தொகுதி/ஊராட்சி போன்ற விவரங்களை தொடர்பு எண்ணுடன் வாட்ஸ்அப் செய்தி மூலம் அனுப்பவும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews