வீடு விற்பனை நிலவரம் அறிய புதிய இணையதளம் அறிமுகம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، ديسمبر 23، 2023

Comments:0

வீடு விற்பனை நிலவரம் அறிய புதிய இணையதளம் அறிமுகம்.



*வீடு விற்பனை நிலவரம் அறிய புதிய இணையதளம் அறிமுகம். Introducing a new website to know the status of house sales.

வீட்டுவசதி வாரிய திட்டங்களில், விற்பனைக்கு தயாராக உள்ள வீடுகள் விபரங்களை எளிதாக அறிய, புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

வீட்டுவசதி திட்டங்கள் குறித்த விபரங்களை பொது மக்கள் அறிவதில், பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.

கோட்ட அலுவலகம் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்களில், வீடுகள் இருப்பு அறிய, அந்த அலுவலகத்தை பொது மக்கள் அணுகுகின்றனர்.

ஆனால், அங்குள்ள பணியாளர்கள் முறையான விபரங்களை அளிப்பதில்லை.

இதேபோன்று, வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் தவணை செலுத்துவதிலும், வாடகை செலுத்துவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இதற்காக, சில ஆண்டுகளுக்கு முன், வீட்டுவசதி வாரியத்துக்கு என பிரத்யேகமாக, ஒரு இணையதளம் துவக்கப்பட்டது.

அதில் முழுமையான விபரங்கள், பொது மக்களுக்கு கிடைப்பதில்லை என புகார் எழுந்தது.

இந்த இணையதளமும் முறையாக செயல்படாமல் முடங்கியது. இதற்கு தீர்வாக, புதிய இணையதளம் ஏற்படுத்த, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்தது.

அதன்படி, tnhb.tn.gov.in என்ற பெயரில் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டது.

இந்த இணையதளத்தை, வாரிய தலைவர் பூச்சி முருகன் துவக்கி வைத்தார்.

வாரிய நிர்வாக இயக்குனர் சரவண வேல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة