அரசு பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் அமலாகியும் ஆசிரியர் காலிப் பணியிடங்களால் வலுக்கும் சிக்கல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، ديسمبر 26، 2023

Comments:0

அரசு பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் அமலாகியும் ஆசிரியர் காலிப் பணியிடங்களால் வலுக்கும் சிக்கல்

அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகியும் ஆசிரியர் காலிப் பணியிடங்களால் வலுக்கும் சிக்கல்!

புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இபாடத்திட்டம் அமலாகியும் நூற்றுக்கணக்கில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளதால் மாணவர்களின் கல்வித்திறன் கேள்விக் குறியாகியுள்ளது. புதுச்சேரி அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்தை விரிவுப்படுத்தியது. இதற்காக நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்புகளைத் தவிர்த்து இதர வகுப்புகள் சிபிஎஸ்இ பாடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. அடுத்தக் கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்புகளும் சிபிஎஸ்இ-க்கு மாறுகின்றன. அத்துடன் அரசு பள்ளிகளில் படித்தோருக்கு 10 சதவீதம் மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடும் தரப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வகுப்புகள் உள்பட பல வசதிகளை உருவாக்கியுள்ளதாக குறிப்பிடுகின்றனர். மேலும், புதுச்சேரி அரசு பள்ளிகளில் கரோனாவுக்கு பிறகு மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்துள்ளன. ஆனால் மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த தேவையான ஆசிரியர்கள் தேவையான அளவுக்கு இல்லாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்த சூழலில் கல்வித்துறையானது ஓய்வுபெற்ற ஆசிரியர் களை நியமிக்க நடவடிக்கை எடுத்தது. 77 விரிவுரையாளர்கள், 154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஓய்வுபெற்ற ஆசிரியர்களை நேர்காணலுக்கு அழைத்தது. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் ஓய்வுபெற்ற ஆசிரியர்களை பணிக்கு அமர்த்து வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதுதொடர்பாக சமூக அமைப்பினர் கூறுகையில், “சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகும் முன்பாகவே பள்ளிகளில் காலிப் பணியிடங்களில் பெரும்பாலானவற்றை நிரப்ப கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அத்துடன் காரைக்காலில் 124, மாஹேயில் 21 என 145 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப விண் ணப்பங்கள் பெறப்பட்டு இன்னும் முடிவு தெரிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில் பள்ளிகளில் பணிபுரிந்த 49 ஆசிரியர்களை சர்வீஸ் பிளேஸ்மென்ட்டில் கல்வித்துறை அலுவலக பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். கல்வித்துறையில் இயக்குநர், இணை இயக்குநர், துணை இயக்குநர்கள், முதன்மைகல்வி அதிகாரிகள் அலுவலகங்களில் எல்டிசி, யுடிசி பணிகளை ஆசிரியர்கள் கவனிக்கின்றனர்.
இதற்கு கல்வித் துறை அதிகாரிக ளும் காரணமாக அமைந்துள்ளனர். ஏற்கெனவே பல ஆசிரியர்களும் சர்வீஸ்பிளேஸ்மென்டில் அலுவலக பணிகளை செய் கின்றனர். முதலில் சர்வீஸ் பிளேஸ்மென்டில் இருப்போரை பள்ளிகளுக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும்” என்கின்றனர். மாணவர்கள் தரப்பில் விசாரித்தபோது, “முக்கியப் பாடங்களை நடத்த ஆசிரியர்கள் இல்லாததால் சரிவர படிக்காமல் அரையாண்டு தேர்வை எழுதியுள்ளோம். பலமுறை பள்ளி முதல்வர்களும், தலைமையாசிரியர்களும் கல்வித்துறையில் முறையிட்டும் பயனில்லை. பல ஆசிரியர்கள் வாரத்தில் இருநாட்கள் ஒரு பள்ளியிலும் மீதமுள்ள நாட்கள்மற்றொரு பள்ளிக்கும் சென்று பணியாற்றுவதால் மேலும் சிக்கல் ஏற்படுகிறது. ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடங்களை மற்றஆசிரியர்கள்தான் நடத்துகின்றனர்” என்றனர். ஆசிரியர்கள் தரப்பில் கூறுகையில், “கல்வித்தரத்தை உயர்த்த போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். முதலில் சர்வீஸ் பிளேஸ்மென்டில் கல்வித்துறை அலுவலகங்கள், மக்கள் பணியாளர் அலுவலகங்களில் பணியில் உள்ள ஆசிரியர் களை பள்ளிக்கு அனுப்ப ஆளுநர், முதல் வர், கல்வித்துறை அமைச்சர் உத்தர விட வேண்டும். முக்கிய பாடங்களை நடத்த ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என்கின்றனர்.

கலையை கற்பதிலும் சிக்கல்: புதுச்சேரியில் ஏழை குழந்தைகள் கலைகளை இலவசமாக கற்கும் வகையில் கல்வித்துறையானது ஜவகர் பால்பவனை அமைத்துள்ளது. புதுச்சேரி பால்பவனில் டிரம்ஸ், கிடார் உட்பட பல கலைகளை கற்றுத்தரும் ஆசிரியர்கள் ஓய்வு பெற்று விட்டனர். அவர்களை நியமிக்காததால் கலைகளை கற்க வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் சரிந்துவிட்டது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة