தலைமை ஆசிரியர்களுக்கு கற்பித்தலைத் தவிர்த்து கூடுதல் பணிச் சுமை அளிப்பதை ஏற்க முடியாது - உயர்நீதிமன்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، ديسمبر 15، 2023

Comments:0

தலைமை ஆசிரியர்களுக்கு கற்பித்தலைத் தவிர்த்து கூடுதல் பணிச் சுமை அளிப்பதை ஏற்க முடியாது - உயர்நீதிமன்றம்



Giving additional workload to head teachers apart from teaching is not acceptable - High Court - தலைமை ஆசிரியர்களுக்கு கற்பித்தலைத் தவிர்த்து கூடுதல் பணிச் சுமை அளிப்பதை ஏற்க முடியாது - உயர்நீதிமன்றம்... தலைமை ஆசிரியர்க ளுக்கும் , ஆசிரியர்களுக்கும் கற்பித் தலைத் தவிர்த்து , மடிக் கணினிக ளைப்பாதுகாத்தல் உள்ளிட்ட கூடு தல் பணிச் சுமை அளிப்பதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை வியாழக்கி ழமை தெரிவித்தது . தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை சசிகலா ராணி , மதுரை மாவட்டத் தைச்சேர்ந்தஅரசுப்பள்ளித்தலைமை ஆசிரியை கலைச்செல்வி ஆகியோர் தாக்கல்செய்தமனுக்கள் :

நாங்கள் பணிபுரிந்த பள்ளிக - ளில் மாணவர்களுக்கு வழங்குவ தற்காக வைக்கப்பட்டிருந்த இல வச மடிக் கணினிகள் திருடுபோ -யின. இந்தத் திருட்டை காரணம் காட்டி, எங்களுக்கு வழங்க வேண் - டிய ஓய்வூதியம், பணப் பலன்களை தர மறுக்கின்றனர் என அவர்கள் கூறியிருந்தனர். இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் முன் மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் ஆஷிஸ் ராவத் (தஞ்சாவூர்), சிவபிரசாத் (மதுரை) ஆகியோர் நீதிமன்றத்தில் உயர்நீதிமன்றம் நேரில் முன்னிலையாகி அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து அரசுத் தரப்பில், தமிழ கத்தில் 140 அரசுப்பள்ளிகளில் மடிக் கணினிகள் திருடுபோயிருப்பதாக புகார் அளிக்கப்பட்டதன்பேரில், போலீஸார் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர் என வாதிடப்பட் டது. இதைப்பதிவு செய்துகொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மடிக் கணினிகள் திருட்டைக் கண்டறிய நவீன தொழில்நுட்ப வச திகளைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த வழக்கில் கல்வித் துறை அதிகாரிகளும், காவல் துறை அதி காரிகளும் சரியாகச் செயல்படா மல் உறக்கத்தில் உள்ளனர். பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் குளி ரூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு, தலைமை ஆசிரியர்க ளுக்கும், ஆசிரியர்களுக்கும் கற்பித் தலைத் தவிர்த்து, மடிக் கணினிக ளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட கூடு தல் பணிச் சுமை அளிப்பதை நீதி மன்றம் ஏற்றுக் கொள்ளாது என்ற நீதிபதி விசாரணையை ஜன. 4- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة