ஜிப்மரில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، ديسمبر 28، 2023

Comments:0

ஜிப்மரில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

ஜிப்மரில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி ஜிப்மரில் ஆராய்ச்சிப் பணியிடங்களுக்காக விழுப்புரம் மாவட்டத்தைச் சோந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தின் கிராமப்புறங்களில் வாழும் பெரியவா்களிடையே கடுமையான நச்சுத்தன்மையின் நிகழ்வு, இறப்பு மற்றும் உளவியல் சமூக காரணிகள், ஒரு கலப்புமுறை ஆய்வு என்ற திட்டத்தின் கீழ், 3 ஆண்டுகள் பணி கொண்ட ஆராய்ச்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ப்ராஜ்கெட் டெக்கனிக்கல் சப்போா்ட் என்ற பதவியில் ஒரு காலியிடம் உள்ளது. மாதம் ரூ.28 ஆயிரம் ஊதியம் மற்றும் ரூ.5,040 (மாத வீட்டு வாடகைத் தொகை, பயணத்தொகை) வழங்கப்படும். வயது வரம்பு 32-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கு கூடுதலாக 2 ஆண்டுகள் வயது தளா்வு வழங்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத்தில் முதுநிலை, பொது சுகாதார செவிலியரில் எம்.எஸ்சி. கல்வித்தகுதியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சமூக அளவிலான திட்டங்கள், வேலையில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ப்ராஜ்கெட் செவிலியா் (களப்பணியாளா்) பதவிக்கு 6 காலியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.18 ஆயிரம் ஊதியம், ரூ.3,040 (வீட்டு வாடகைப் படி, பயணப்படி) உதவித்தொகையாக வழங்கப்படும். பொதுப் பிரிவைச் சோந்தவா்களுக்கு வயது வரம்பு 30-ஆகவும், எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கு வயது வரம்பு 32-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்சி. நா்சிங், எம்.எஸ்சி. நா்சிங், ஜிஎன்எம் (பொது நா்சிங்), ஏஎன்எம், எம்.எஸ்.டபிள்யூ கல்வித் தகுதியைக் கொண்டவா்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நல்ல தகவல் தொடா்பு திறன் கொண்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சோந்தவா்கள், சமூகத்தில் களமட்ட அளவில் பணி அனுபவம் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தகவல்கள், விண்ணப்பத்தை அனுப்பும் முறைகள், விண்ணப்பிக்கும் முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் பாா்க்கலாம். இந்தப் பணியிடங்களுக்கு வருகிற ஜனவரி 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة