டாஸ்மாக்கில் மதுகுடித்துவிட்டு பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் தகராறில் ஈடுபட்ட மாணவர்கள்
பள்ளியில் குடிபோதையில் மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டு கற்களை வீசி, ஆசிரியர்களை திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், பேரங்கியூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக உதயசூரியன் என்பவர் உள்ளார். இங்கு நேற்று (நவம்பர் 29) மதியம் அவர் மாணவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது 11 மற்றும் 12வது படிக்கும் 4 மாணவர்கள் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் பள்ளிக்கு அருகே செயல்படும் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தது விட்டு வந்திருக்கிறார்கள்!
இந்த நிலையில், போதை தலைக்கு ஏறிய நிலையில் பள்ளியில் இருந்த ஆசிரியர்களை தகாத வார்த்தையால் திட்டி, பாடம் நடத்த விடாமல் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளியின் நுழைவு வாயில் கேட்டை சேதப்படுத்தி கற்களை வீசி, ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது சம்பந்தமாக பள்ளியின் தலைமை ஆசிரியர் உதய சூரியன் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரகளையில் ஈடுபட்ட 4 மாணவர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்புதான், அரசு பள்ளியில் உங்கள் மாணவர்களை சேருங்கள், முழுவதாக நாங்கள் அவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியாது போனாலும், நல்ல ஒழுக்கத்தை கற்பிப்போம் என்று கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினாரே, அந்த ஒழுக்கம் இதுதானா என்று பெற்றோர்கள் கேள்வி கேட்டனர்! விடியாத ஆட்சியில், ஆசிரியர்களுக்கு மாணவர்களிடமிருந்து பாதுகாப்பு இல்லை! மாணவர்களின் தவறுகளை தட்டிக் கேட்க வேண்டிய ஆசிரியர்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, காவல் நிலையம் சென்றுள்ளது கொடுமையான நிகழ்வு என்கிறார்கள் சில ஆசிரிய பெருமக்கள்!
விடியாத திமுக அரசு பள்ளிகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்ததன் விளைவு, பள்ளி மாணவர்கள் மதுபோதைக்கு அடிமையாகி சீர் கெட்டு வருகின்றனர் எனவே இப்போதாவது பள்ளிகள் அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றி மாணவர்களை காக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் கொதிக்க வைத்துள்ளனர்!

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.