ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் - 19.12.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، ديسمبر 15، 2023

Comments:0

ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் - 19.12.2023

Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations) 15-12-2023

ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் அன்பிற்கினிய தோழர்களே,

வணக்கம்.

ஜாக்டோ ஜியோ உபர்மட்டக்குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் எதிர்வரும் 19.12.2023 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு திருச்சியில் பின்வரும் பொருள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்பதால். இக்கூட்டத்தில் தாங்கள் அவசியம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நாள்

19.12.2023

இடம்

அருண் ஓட்டல் காங்கலி ஹால் (மத்திய பேருந்து நிலையம் அருகில்) திருச்சி

பொருள்

கடந்த 18.10.2023 அன்று திருச்சியில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்டக் குழுக் கூட்ட முடிலின் அடிப்படையில், எதிர்வரும் 28.12.2023 அன்று கோட்டை முற்றுகை போராட்டத்தினை மிக எழுச்சியாக நடத்துவது குறித்தான ஆலோசனை

தோழமை வாழ்த்துக்களுடன் மாநில ஒருங்கிணைப்பாளர்களுக்காக

ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழுத் தலைவர்களே!!!

ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கனே!!!

அனைவரும் திருச்சியில்

கடந்த 30 மாதங்களாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்அரசு பணியாளர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கும் ஆளும் வர்க்கத்தினை நிர்பந்திக்கக்கூடிய போராட்டமாக கோட்டை முற்றுகைப் போராட்டடத்தினை நடத்திடுவோம்!!!

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை வென்றெடுப்போம்!!!

பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுப்போம்!!!

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றிட வைப்போம்!!!

ஜாக்டோ ஜியோ 28.12.2023 கோட்டை முற்றுகை

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة