IFHRMS - 20.12.2023 பிறகு சர்வர் இயங்காது!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، ديسمبر 06، 2023

Comments:0

IFHRMS - 20.12.2023 பிறகு சர்வர் இயங்காது!!!

IFHRMS - 20.12.2023 பிறகு சர்வர் இயங்காது!!!

IFHRMS சர்வரின் தரத்தை உயர்த்த கருவூலக்கணக்கு ஆணையரகத்தால் இம்மாதத்திலேயே நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இம்மாதத்திலேயே சர்வர் மைக்கிரேசன் நடைபெறவிருப்பதால் பின்வரும் தேதிக்கட்டுப்பாடுகளை கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1) 08.12.2023 மாலைக்குள் சம்பளப்பட்டியில் பிரதிபலிக்குமாறு HR தொடர்பான மாற்றங்களை செய்துமுடித்திடல் வேண்டும்.

2) 11.12.2023 அன்றே சம்பளப்பட்டியினை generate செய்து, 12.12.2023 அன்றே கருவூலத்தில் ஒப்படைத்திடல் வேண்டும்.

3) கிறித்துமஸ் பண்டிகை முன்பணம் மற்றும் டெலிபோன், மின்கட்டணம் தொடர்பான காலக்கெடுவினையுடைய பில்களை மட்டும் சம்பளப்பட்டியுடன் சேர்த்து 15.12.2023 ஆம் தேதிக்குள் வன்நகல் மற்றும் மென்நகலாய் கருவூலத்தில் ஒப்படைத்திடல் வேண்டும்.


4. 15.12.2023 வரை வரப்பெறும் பட்டிகள் மட்டுமே ஆய்வுசெய்யப்பட்டு 20.12.2023 ஆம் தேதி சம்பளவரவிற்காக வங்கிக்கு அனுப்ப இயலும்.

5. 20.12.2023 இற்குப்பிறகு எவருக்கும் சர்வர் இருக்காது என்பதால் 15.12.2023 இற்குள் கருவூலத்திற்கு பட்டிகளை வழங்கி உரிய தேதியில் ஊதியத்தினை பெற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்க.

6. புதுப்பிக்கப்பட்ட சர்வர் மீண்டும் 02.01.2024 முதல்தான் செயல்பாட்டிற்கு வரும் என்பதால்.. மேற்சொன்ன காலக்கெடுவினை தவறவிடாமல் இம்மாதம்(DEC-2023) கடைபிடித்து அசவுகரியங்களைத் தவிர்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة