அரசு விடுமுறை நாட்கள் அரசு அலுவலர்களுக்கு பொருந்தாது - கலெக்டர் அதிரடி அறிவிப்பு
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி நகர், கிராமப்புறங்களில் மழை வெள்ள நீர் புகுந்தது. தற்போது, மழை நின்று வெள்ளநீர் வடிந்து வருகிறது. நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் வடியாத காரணத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 18-ம் தேதியில் இருந்து இன்று வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு விடுமுறை நாட்கள் அரசு அலுவலர்களுக்குப் பொருந்தாது என்று அம்மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். மழை பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடப்பதால் அரசு விடுமுறை பொருந்தாது என தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.