3 புதிய அம்சங்களுடன் கூகுள் மேப் செயலி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 21, 2023

Comments:0

3 புதிய அம்சங்களுடன் கூகுள் மேப் செயலி



*3 புதிய அம்சங்களுடன் கூகுள் மேப் செயலி!*

கூகுள் மேப் செயலியில் மூன்று புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யவுள்ளது.

இதன்மூலம் கூகுள் மேப் செயலி பயன்பாட்டில் துல்லியம் மற்றும் இலகுத்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவரும் கூகுள் மேப் செயலியை பயன்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது.

தற்போது கூகுள் மேப் செயலியில் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய அம்சங்கள், அதன் பயன்பாட்டை மேலும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் 2024-ம் ஆண்டின்தொடக்கத்தில் அறிமுகம் செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது.

அதன்படி மேப் லென்ஸ் மேம்பாடு (lense Integration), முகவரி விளக்கம் (address descriptors), நடைப்பயண வழிகாட்டி (Live view walking navigation) ஆகிய மூன்று அம்சங்களை அறிமுகம் செய்யவுள்ளது. 

கூகுள் மேம் பயன்படுத்தி நடக்கும் பயனர்களுக்கு நடைப்பயண வழிகாட்டி அம்சம் துல்லியமான இலக்குகளைக் காண்டிக்கும். 

இந்தியாவில் மட்டும் கூகுள் மேப் செயலியில் நாள்தோறும் சராசரியாக 50 மில்லியன் இலக்குகள் உள்ளீடு செய்யப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் சராசரியாக 2.5 மில்லியன் கிலோமீட்டருக்கான இலக்குகள் காண்பிக்கப்படுகின்றன. 

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews