அஞ்சல் வழி கூட்டுறவு பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவகாசம்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، ديسمبر 05، 2023

Comments:0

அஞ்சல் வழி கூட்டுறவு பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவகாசம்?

நேரடி வகுப்பு சேர்க்கை கட்டணத்தைவிட அஞ்சல் வழி கூட்டுறவு பட்டய படிப்புக்கு அதிக கட்டணம்!

அஞ்சல் வழி கூட்டுறவு பட்டயப் பயிற்சிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் கூடுதலாக உள்ளதா கவும், அதற்கான விண்ணப்பிக்கும் தேதியையும் நீடிக்க வேண்டு மெனவும் கோரிக்கை எழுந்தது.

தமிழகத்தில் 30 கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் உள்ளன. இங்கு ஓராண்டு கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நேரடி வகுப்பில் சேர ரூ.18,750 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எனினும் கூட்டுறவுத் துறையில் வேலை வாய்ப்பு குறைந்ததால், இந்தப் பயிற்சியில் நேரடியாக சேர ஆர்வம் குறைந்து இருந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் நகர மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் எழுத்தர் உள்ளிட்ட 2,400 பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளன.

இதற்கான அறி விப்புகள் அந்தந்த மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையங்கள் மூலம் வெளியிடப்பட்டு நவ.30-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அதே சமயத்தில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பட்டப் படிப்புடன் கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சி முடித்திருக்க வேண்டும் அல்லது பட்டயப் பயிற்சியில் சேர்ந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நேரடிப் பயிற்சி வகுப்புகள் தொடங்கி விட்டன. தற்போது கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் அஞ்சல் வழி மூலம் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியை தொடங்கியுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க இன்று (நவ.30) கடைசி என அறிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்களுக்கு விண்ணப் பிக்க கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர்ந்திருக்க வேண்டுமென கூறியிருப்பதால், ஏராளமானோர் அஞ்சல்வழியில் விண்ணப்பித்து வருகின்றனர். அஞ்சல் வழிக்கு நிர்ணயிக் கப்பட்ட பயிற்சிக் கட்டணம் ரூ.20,750, நேரடி வகுப்புக்கான கட்டணத்தை விட அதிகம். மேலும் மாணவர்கள் சேர்க்கைக்கும் குறுகிய காலமே வழங்கப்பட்டுள்ளது.

இதனால் கட்டணத்தைக் குறைக்கவும், விண்ணப்பிக்கும் காலத்தை நீடிக்கவும் வேண்டுமென கோரிக்கை எழுந்தது. அதே போல் காலியிடங்களுக்கு விண்ணப் பங்களை பெறும் தேதியும் நீட்டிக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர். இது குறித்து அஞ்சல் வழி படிப்புக்கு விண்ணப்பித்த சிலர் கூறுகையில் ‘‘நேரடி வகுப்புகள் வாரத்தில் 5 நாட்கள் நடைபெறும். அதற்குப் பயிற்சிக் கட்டமாக ரூ.18,750 வசூலிக் கின்றனர். ஆனால் அஞ்சல் வழியில் வாரத்தில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும். இதற்கு ரூ.20,750 கட்டணம் நிர்ணயித்துள்ளனர். இதைக் குறைப்பதோடு கட்டணத்தை 2 தவணைகளில் செலுத்த வழிவகை செய்ய வேண்டும். அஞ்சல் வழிப் பயிற்சி சேர்க்கையை குறுகிய காலத்தில் அறிவித்துவிட்டு உடனே கட்டணம் செலுத்தச் சொல்கின்றனர். ரூ.20,750-ஐ செலுத்த சிரமமாக உள்ளது.

இதனால் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். மேலும், 2 தவணைகளில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அஞ்சவழிப் பயிற்சி அறிவிப்பு பலரையும் சென்றடையவில்லை. இதனால் பயிற்சியில் சேர்வதற்கான காலத்தையும், அதேபோல் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பம் பெறும் காலத்தையும் நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் கேட்டபோது ‘‘கட் டணம் நிர்ணயம், காலநீட்டிப்பை தலைமை அலுவலகம் தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்று கூறினர். இப்பிரச்சினையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தலையிட்டு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة