தமிழக நல்லாசிரியரிடம் CBI அதிகாரி பேரம் பேசுவதாக குற்றச்சாட்டு? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، ديسمبر 05، 2023

Comments:0

தமிழக நல்லாசிரியரிடம் CBI அதிகாரி பேரம் பேசுவதாக குற்றச்சாட்டு?



தமிழக நல்லாசிரியரிடம் CBI அதிகாரி பேரம் பேசுவதாக குற்றச்சாட்டு?

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள செம்பொன்குடியை சேர்ந்த ஆசிரியர் பரமக்குடி அருகே உள்ள கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

அவருடைய சேவையை பாராட்டி கடந்த 2022 செப்டம்பர் 5ல் ஆசிரியர் தினம் அன்று டெல்லியில் குடியரசுத் தலைவரிடம் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றார் . இந்த சூழ்நிலையில் வரி ஏய்ப்பு புகாரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக மதுரையில் சிபிஐ அலுவலகம் அருகே சிபிஐ அதிகாரி தினேஷ் என்பவர் அவரிடம் வழக்கில் இருந்து தங்களை விடுவிப்பதற்காக 7 லட்சம் ரூபாய் பேரம் பேசுகிறார்.

அதற்கு ஆசிரியர் ராமச்சந்திரன் என்பவர் தற்பொழுது என்னால் 7 லட்சம் ரூபாய் தர முடியாது இரண்டு லட்ச ரூபாய் முன்பணமாக தருவதாகவும் பின்னர் 5 லட்சம் தருவதாகவும் கூறுகிறார். மேலும் இது வழக்கு தொடர்பாக டிஎஸ்பி இடம் ஒரு வார்த்தை பேசிக் கொள்ளுங்கள் என்றும் கூறுகிறார் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இவரது சகோதரர் பஞ்சாட்சரம் Tax Information Network என்ற நிதி நிறுவனத்தை மதுரை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் மூலம் Income Tax E file செய்யும் போது பலரது வருமானத்தை குறைவாக காண்பித்து, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் நோக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக கடந்த 2021-ம் ஆண்டு புகார்கள் வந்தன. அதன் பேரில் சி.பி.ஐ போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்தாண்டு பஞ்சாட்சரத்தை கைது செய்தனர். பின்னர் அவர் பிணையில் வெளிவந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணையில் பஞ்சாட்சரதத்தின் தம்பியும், நல்லாசிரியர் விருது பெற்றவருமான ராமச்சந்திரன் வங்கி கணக்கிற்கு பஞ்சாட்சரம் நிறுவனத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரை முறைகேடாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள், ராமச்சந்திரனிடம் விசாரித்தனர்.

பின்னர் அவர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சி,பி.ஐ போலீசார் கடந்த பிப்.24ம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் என்பது குறிப்பிடத்தகது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة