கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பதவிக்கு 3000 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியீடு.
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உட்பட பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பதவிக்கு 3000 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை கூட்டுறவு துறை வெளியிட்டுள்ளது.கூட்டுறவு துறையின் கீழ் மொத்த கூட்டுறவு பண்டகாலை நகர கூட்டுறவு வங்கிகள் பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வேளாண் விற்பனையாளர் சங்கம் போன்றவை செயல்படுகின்றன.
அவை சங்க உறுப்பினர்களுடன் கடன் வழங்குவதுடன் ரேஷன் கடைகள் பல்பொருள் அங்காடிகள் போன்றவற்றை நடத்தி வருகின்றன.மேற்கண்ட சங்கங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50, 60 என மாநிலம் முழுதும் 3000 உதவியாளர் பதவிகள் காலி பணியிடமாக உள்ளன. எனவே அந்த பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் நேற்று வெளியிட்டுள்ளன. எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு வாயிலாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
DOWNLOAD Notification PDF CLICK HERE
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.