பணி நெருக்கடி - பள்ளியில் தற்கொலைக்கு முயன்ற அரசு பள்ளி ஆசிரியர்!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، نوفمبر 10، 2023

Comments:0

பணி நெருக்கடி - பள்ளியில் தற்கொலைக்கு முயன்ற அரசு பள்ளி ஆசிரியர்!!!



பணி நெருக்கடி - பள்ளியில் தற்கொலைக்கு முயன்ற அரசு பள்ளி ஆசிரியர்!!! Work crisis - Govt school teacher who tried to commit suicide in school!!!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர்நேற்று காலை பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார்.

அங்கிருந்த சக ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அவரைமீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக பென்னாகரம் போலீஸார் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். தற்கொலைக்கு முயன்ற ஆசிரியரின் பணிகளில் குறைகள் இருப்பதாக, நேற்று காலை பள்ளியில் நடந்த பிரேயர்நிகழ்வின்போது தலைமை ஆசிரியர் சுட்டிக் காட்டியதாகவும், அதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து கல்வித் துறை வட்டாரத்தில் கேட்டபோது, “தற்போது ஆசிரியர்களுக்கு அதிகநெருக்கடிகள் உள்ளன. பாடங்கள் கற்பிப்பது மட்டுமின்றி, தொடர்பேஇல்லாத பல பணிகள் வழங்கப்படுவதால், மனஉளைச்சல் அடைகின்றனர். தலைமை ஆசிரியர்களுக்கும் நெருக்கடியும், அழுத்தமும் உள்ளது. எனவே, அரசு இதுகுறித்துஆய்வு மேற்கொண்டு, ஆசிரியப் பணியை செம்மையாக மேற்கொள்ள உதவ வேண்டும். மேலும், யோகா போன்ற பயிற்சிகளை அளிக்க வேண்டும்” என்றனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة