3GB இலவச டேட்டா வேண்டுமா? - தீபாவளிக்கு அசத்தல் ஆஃபர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، نوفمبر 07، 2023

Comments:0

3GB இலவச டேட்டா வேண்டுமா? - தீபாவளிக்கு அசத்தல் ஆஃபர்

3GB இலவச டேட்டா வேண்டுமா? - தீபாவளிக்கு அசத்தல் ஆஃபர் வழங்கும் BSNL.

பண்டிகை காலத்தை முன்னிட்டு Diwali Bonanza Offer தொடர்பாக தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியாவில் குறிப்பிட்ட சில சார்ஜ் வவுச்சர்களில் கூடுதல் டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் அறிவிப்பின்படி தற்போது ரூ.251, ரூ.299 மற்றும் ரூ.398 பிளான்களை ரீசார்ஜ் செய்யும் போது BSNL வாடிக்கையாளர்கள் கூடுதல் டேட்டா ஆஃபரை பெறலாம்.

BSNL வழங்கும் கூடுதல் டேட்டாவை பெற யூஸர்கள் தங்கள் நம்பரை BSNL போர்ட்டல் அல்லது Self-care-ஆப் (BSNL Self-care) மூலம் ரீசார்ஜ் செய்யலாம். மேற்கண்ட வழிகளில் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே நிறுவனத்தின் இந்த ஸ்பெஷல் டேட்டா ஆஃபரை பெற முடியும்.

BSNL வழங்கும் ஸ்பெஷல் டேட்டா ஆஃபர் குறித்த விவரங்கள்:

ரூ.251 பிளானில் யூஸர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் 70GB டேட்டாவுடன் கூடுதலாக 3GB டேட்டா இலவசமாக கிடைக்கும். ஆனால் இதன் வேலிடிட்டி 28 நாட்கள் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதாவது 28 நாட்களுக்குள் நீங்கள் அந்த கூடுதல் 3GB டேட்டாவை காலி செய்து விட வேண்டும். தீபாவளி பண்டிகையையொட்டி நிறுவனம் மற்றொரு 3GB இலவச டேட்டா பிளானை ரூ.299 ரீசார்ஜ் வவுச்சரில் அறிவித்து உள்ளது. இந்த ரூ.299 ரீசார்ஜ் பிளான் ஏற்கனவே நாளொன்றுக்கு 3GB டேட்டா, ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்ஸ்களுடன் 30 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இந்த ரீசார்ஜ் பிளானோடு 3GB போனஸ் டேட்டாவை நிறுவனம் வழங்குகிறது.

மேற்கண்ட 2 ரீசார்ஜ் பிளான்களை தவிர நிறுவனம் அதன் ஃபெஸ்டிவல் டீல்களில் சேர்த்துள்ள மற்றொன்று ரூ.398 பிளான் ஆகும். ரூ.398-க்கு ரீசார்ஜ் செய்யும் பிஎஸ்என்எல் யூஸர்கள் ஏற்கனவே பிளானில் கொடுக்கப்படும் 120GB டேட்டாவுடன் கூடுதலாக 3GB இலவச டேட்டாவை பெறலாம். 3GB கூடுதல் டேட்டாவைத் தவிர, இந்த ரீசார்ஜ் பிளானில் BSNL நிறுவனம் ஏற்கனவே அன்லிமிட்டெட் எஸ்டிடி மற்றும் லோக்கல் வாய்ஸ் கால்ஸ், நாளொன்றுக்கு 100 SMS மற்றும் 30 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة