Tamil Nadu Chief Minister Aptitude Test - மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு முடிவு டிச.1ல் வெளியீடு..!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، نوفمبر 28، 2023

Comments:0

Tamil Nadu Chief Minister Aptitude Test - மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு முடிவு டிச.1ல் வெளியீடு..!!

Important Notice for Students: Tamil Nadu Chief Minister Aptitude Test Result Released on Dec 1st..!! - மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு முடிவு டிச.1ல் வெளியீடு..!!



தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு முடிவு டிசம்பர் 1-ம் தேதி காலை 11 மணி வெளியிடப்பட உள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் நடப்பு 2023-2024 கல்வியாண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்தத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டை பின்பற்றி இந்த திறனறி தேர்வு மூலமாக தலா 500 மாணவ, மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர், அவர்களுக்கு உதவித் தொகையாக இந்த கல்வியாண்டில் மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகையானது மாணவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு முடிவு டிசம்பர் 1-ம் தேதி காலை 11 மணி வெளியிடப்பட உள்ளது. கடந்த 7-ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வை 1,27,673 மாணவர்கள் எழுதினர். திறனாய்வு தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة