ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி - பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கடைசி நாள் - 05.12.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، نوفمبر 29، 2023

Comments:0

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி - பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கடைசி நாள் - 05.12.2023



ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி - பெண்கள் விண்ணப்பிக்கலாம்

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் தனியார் மற்றும் பொதுஇடங்களில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் சகி என்ற சிறப்பு திட்டமான ஒருங்கிணைந்த சேவை மையமானது கன்னியாகுமரி அரசு மருத்துவமனை வளாகத்தில் 10.11.2020 அலுவலகமானது 24 மணி நேரமும் இயங்கி வருகின்றது. முதல் தலைமை ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு வழக்கு பணியாளர் இரண்டு பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் வசிக்கும் கீழ்கண்ட தகுதி வாய்ந்த பெண்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடம், தரைதளம், கன்னியாகுமரி மாவட்டம்-629001 என்ற முகவரிக்கு பதிவு தபாலில் 05.12.2023 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். வெளியீடு - செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், கன்னியாகுமரி மாவட்டம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة