JEE - முதன்மை தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு
உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.ஐ.டி., இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.,) அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.வரும், 2024 - 25 கல்வியாண்டுக்கு, ஜே.இ.இ.,முதன்மை மற்றும் ஜே.இ.இ., அட்வான்ஸ் என இரண்டு தேர்வுகளாக நடைபெற உள்ளது. ஜன.,24 முதல் பிப்.,1 வரை, ஜே.இ.இ., முதன்மை தேர்வு நடக்கிறது; முதன்மை தேர்வு முடிவுகள் பிப்., 12 ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, குஜராத், கன்னடம், மலையாளம், மராத்தி உட்பட, 13 மொழிகளில் தேர்வு நடக்கவுள்ளது.இதற்கான அறிவிப்பை, தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேர்வெழுத தகுதியான மாணவர்கள் https://jeemain.nta.ac.in என்ற இணையதளத்தில், வரும், 30ம் தேதி இரவு, 9:00 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல், சந்தேகங்கள் இருப்பின், 011 - 40759000 அல்லது 011 - 69227700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.