தேசிய கீதத்தை அவமதித்தாக ஆசிரியர் மீது புகார்!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 29, 2023

Comments:0

தேசிய கீதத்தை அவமதித்தாக ஆசிரியர் மீது புகார்!!!



தேசிய கீதத்தை அவமதித்தாக ஆசிரியர் மீது புகார்!!!!

ஆலாந்துறையில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வரை பிரிவுகளில் சுமார் 900 மாணவ- மாணவிகள் பயில்கிறார்கள்.

32 ஆசிரியர்கள் ஆலாந்துறை அரசு மேல் பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே பள்ளிக்கு கூடுதல் தலைமை பொறுப்பு ஆசிரியராக கார்த்திக்கேயன் பணியில் உள்ளார்.

பள்ளி நிர்வாக பொறுப்பை தேன் மொழி ஆசிரியர் கவனித்துக் கொண்டு பாட வகுப்புகளை நடத்தி வருகிறார் . பள்ளியில் வேலை நாள்களில் காலை வேலையில் மரபுபடி மாணவ, மாணவிகளுடன் ப்ரேயர் நடப்பது வழக்கம். இதில் கூடுதல் பொறுப்பு தலைமை ஆசிரியர் கார்த்திகேயன், கடந்த செவ்வாய் கிழமை பிரேயர் நடக்கும்பொது, மாணவ, மாணவிகள் முன்பு தேசிய கீதம் ஒலித்துக் கொண்டு இருந்த போது, திடீரென பாதியில் தேசிய கீதத்தை நிறுத்தி, மைக்கில் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் முன் உரையாற்றியதாக அப்பள்ளியில் பணியாற்றும் கலை பிரிவு ஆசிரியர் ராஜிகுமார் கோவை கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அப்போது பேசிய அவர், பொறுப்பு தலைமை ஆசிரியர் பள்ளி பிரேயரில் ஒலித்த தேசிய கீதத்தினை நிறுத்திவிட்டு, சிறார்கள் மின்னிலைகிலே உரையாற்றிவிட்டு, நாட்டின் தேசிய கீதத்தை மீண்டும் ஒலிக்க செய்ததாக அவர் தெரிவித்தார்.

இது இந்திய அரசியல் அமைப்பு அடிப்படை உரிமை சட்டத்தை 51(A) மீறப்படும் செயலாகும் என்ற அப்பள்ளி கலை ஆசிரியர் ராஜ்குமார், கூடுதல் பொறுப்பு ஆசிரியர் கார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு உதாசினப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கலை ஆசிரியர் ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் பள்ளியின் காலை இறை வணக்க வழிபாடு நேரத்தில் தேசிய கீதத்தை ஒலிக்கும் போது பாதியில் நிறுத்தி அவமரியாதை செய்த பள்ளி கூடுதல் பொறுப்பு தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் மீது, ( இந்திய அரசியல் அமைப்பு அடிப்படை உரிமை சட்டத்தை 51(A) மீறி செயலால்) அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாக தெரிவித்தார்.

பள்ளி கல்வி துறை அதிகாரிகளின் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தெரிவித்ததாக புகார் தந்த ஆசிரியர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews