அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 29, 2023

Comments:0

அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்



அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்

அன்னூர் அருகேயுள்ள ஆனையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்து முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் சார்ந்தும், குழந்தைத் திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் மு.ச.ராஜலட்சுமி தலைமை வகித்தார்.

அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கிராம சேவிகா A.லட்சுமி மற்றும் C.ராஜாமணி ஆகியோர் பள்ளியில் பயிலும் பத்து முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவிகளிடம் பேசும் போது: தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் மூலம் மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது.பள்ளிப் படிப்பை நீங்கள் முடித்து கல்லூரியில் சேர வேண்டும்.பாதியில் படிப்பை நிறுத்தக் கூடாது. இத்திட்டத்தின் மூலம், அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளின் வங்கிக் கணக்குகளில் இந்த தொகை மாதம்தோறும் வரவு வைக்கப்படுகிறது என்றார்.

மேலும் குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள், பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியம், பெண் குழந்தைகளுக்கு திருமண வயது முழுவதும் பூர்த்தி செய்யப்பட்டு திருமணம் செய்யப்பட வேண்டியதன் அவசியம், கட்டாய திருமணத்தை தடுக்கும் வழிமுறைகளை மாணவிகளுக்கு விரிவாக விளக்கி கூறினார்கள்.இந்நிகழ்ச்சியில்,பெண் குழந்தைகளுக்கான உதவி மையம் எண் 1098, பெண்களுக்கான உதவி மைய எண் 181, ஆண், பெண் மாணவர்களுக்கான உதவி மையம் எண் 14417 ஆகிய உதவி எண்களை பயன்படுத்துமாறும்கேட்டுக் கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews