புகார் அளித்த மாணவிகளை முட்டிப் போட வைத்து தண்டித்த பள்ளி தலைமை ஆசிரியர் - வகுப்புகளை புறக்கணித்து மாணவிகள் போராட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 06, 2023

Comments:0

புகார் அளித்த மாணவிகளை முட்டிப் போட வைத்து தண்டித்த பள்ளி தலைமை ஆசிரியர் - வகுப்புகளை புறக்கணித்து மாணவிகள் போராட்டம்

The school principal who punished the female students who complained by beating them - the students boycotted the classes and protested - புகார் அளித்த மாணவிகளை முட்டிப் போட வைத்து தண்டித்த பள்ளி தலைமை ஆசிரியர் - வகுப்புகளை புறக்கணித்து மாணவிகள் போராட்டம்

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் புழுக்கள்!

சேலம்: கோட்டை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருப்பதாகவும், கழிவறைகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் புகார் அளித்த மாணவிகளை முட்டிப் போட வைத்து தண்டித்த பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்வாணி! தலைமை ஆசிரியரின் செயலை கண்டித்து 200க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு



சேலம் மாவட்டம் கோட்டை மாநகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருப்பதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சேலம் கோட்டை பகுதியில் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவிகளுக்காக தனியாக கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. அதேபோல பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக மேல்நிலைத்தொட்டி அமைக்கப்பட்டு அந்த தொட்டியில் இருந்து பைப்புகள் மூலமாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருப்பது குறித்து கடந்த 2 நாட்களாக மாணவிகள் புகார் அளித்து வந்துள்ளனர். பள்ளி கழிவறை சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டி மூடப்படாமல் குப்பை கூளங்களாக இருப்பதாகவும் மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்களையும் மாணவிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த நிலையில், புகார் கூறிய மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் கண்டித்ததுடன் மட்டுமின்றி, முட்டி போட வைத்து தண்டித்துள்ளார். இதற்கு மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தலைமை ஆசிரியை தமிழ்வாணியை கண்டித்து 200க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்பறையை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சுகாதாரமற்ற முறையில் இருக்கும் கழிவறையை சுத்தப்படுத்த வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். மாணவிகளை கண்டிக்கக்கூடாது என கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது தலைமை ஆசிரியர் தமிழ்வாணி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவிகள் சமாதானம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews