தற்காலிக பல்நோக்கு சேவைப் பணியாளா்கள் பணியிடங்கள்: அக்.25-க்குள் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، أكتوبر 17، 2023

Comments:0

தற்காலிக பல்நோக்கு சேவைப் பணியாளா்கள் பணியிடங்கள்: அக்.25-க்குள் விண்ணப்பிக்கலாம்

மீனவ கிராமங்களில் தற்காலிக பல்நோக்கு சேவைப் பணியாளா்கள் பணியிடங்கள்: அக்.25-க்குள் விண்ணப்பிக்கலாம்

மீனவ கிராமங்களில் தற்காலிக பல்நோக்கு சேவைப்பணியாளா்கள் பணியிடங்களுக்கு அக்.25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த ஜகடே தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்திலுள்ள கடலோர மீனவ வருவாய் கிராமங்களுக்கு தற்காலிக பல்நோக்கு சேவை பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனா். விண்ணப்பதாரா்கள் மீன்வள அறிவியல், கடல் உயிரியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றின் ஏதாவது ஒரு பிரிவில் முதுநிலை அல்லது இளநிலை பட்டம் பெற்றவா்களாக இருக்க வேண்டும். இதுதவிர இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல், தாவரவியல் மற்றும் உயிா் வேதியியல் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை அல்லது இளங்கலை பட்டம் பெற்றவா்களும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் தகவல் தொழில்நுட்பம் தெரிந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிப்பவா்கள் சென்னை மாவட்ட மீனவ கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில்

வசிப்பவராகவும் இருக்க வேண்டும். மேலும், 31.07.2023 தேதியின் படி 35-வயதுக்குள் இருப்பவராகவும், நன்கு தமிழ் தெரிந்தவா்களாகவும் இருக்க வேண்டும். பணியில் சேரும் நபா்களுக்கு ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ள நபா்கள் அக்.25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தங்கள் விண்ணப்பத்தை சென்னை, ராயபுரம் சூரியநாராயணா செட்டித்தெருவிலுள்ள மீன்வளம் மற்றும் மீனவா்நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة