தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானங்களை நிறைவேற்றிட முதல்வருக்கு கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 09, 2023

Comments:0

தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானங்களை நிறைவேற்றிட முதல்வருக்கு கோரிக்கை

A request to the Chief Minister to implement the resolutions of the Confederation of All Government Officers, Teachers and Local Government Employees Unions of Tamil Nadu - தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு 21.09.2023 அன்று நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அனுப்புதல் - நிறைவேற்றிட முதல்வருக்கு கோரிக்கை

தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் 21.09.2023 காலை 10.30 மணியளவில் சென்னை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கட்டடத்தில் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத்தலைவருமான திரு. த. அமிர்தகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க மேனாள் தலைவர் முனைவர் கோபாலபுரம் செ. பீட்டர்அந்தோணிசாமி அவர்கள் முன்னிலை வகித்தார். கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கம், தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமைச்சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், தமிழ் மாநில அரசுப்பணியாளர் சங்கம், தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் தேசிய ஆசிரியர் சங்கம் (தமிழ்நாடு) ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் பெருமளவில் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தங்களின் மேலானபார்வைக்கும், நடவடிக்கைக்காகவும் சமர்ப்பிக்கப்படுகிறது


கோரிக்கைகள்:

1. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வாக்குறுதியளித்தவாறு, புதிய ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக இரத்து செய்துவிட்டு, 01.04.2003-க்கு முன்பு நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

2. கொரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப்பலனை மீண்டும் வழங்க வேண்டும்.

3.கடந்த ஏழாவது ஊதியக்குழு மாற்றத்தின் போது 01.01.2016 முதல் 30.09.2017 வரை தமிழக அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய 21 மாத நிலுவைத் தொகையினையும், கொரோனா காலகட்டத்தில், முடக்கி வைக்கப்பட்டு, பின்னர், மத்திய அரசு அதன் பணியாளர்களுக்கு வழங்கிய அகவிலைப்படி உயர்வை, தமிழக அரசு பணியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் காலதாமதமாக வழங்கப்பட்ட, அகவிலைப்படி நிலுவைத் தொகையினையும் வழங்க வேண்டும். 4. தலைமைச் செயலகம் உள்ளிட்ட தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிடவும், அனைத்து நிலை பதவி உயர்வுகளையும் உரிய காலத்தில் வழங்கிடவும், கழிவுநீக்கம் செய்யப்பட்ட அரசு வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வழங்கிடவும், அனைத்து துறைகளிலும் உள்ள தொகுப்பூதிய, மதிப்பூதிய மற்றும் புற ஆதார் (Out sourcing) பணிநியமனங்களையும் தமிழக அரசு முற்றிலும் கைவிட்டு காலமுறை ஊதியத்தில் அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும்.

5. சத்துணவு, அங்கன்வாடி திட்டத்தில் பணிபுரிந்து வரும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் அலுவலர்கள் அனைவரையும், மதிப்பூதியம் பெற்றுவரும் ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதிய, மதிப்பூதிய அலுவலர்கள் அனைவரையும் நிரந்தர அரசு பணியாளர்களாக அறிவித்து, காலமுறை ஊதியமும், பணிப் பாதுகாப்பும் சட்டபூர்வ ஓய்வூதிய பலன்களும் வழங்க வேண்டும்.

6. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பணியாளர்கள் அனைவரையும் அரசு பணியாளர்களாக அறிவித்து அதற்கான நிர்வாக நடைமுறைகளில் மாற்றங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.

இறுதியாக, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலப்பொருளாளர் திரு. ஆர்.சி.எஸ். குமார் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews