ஆசிரியர் ஊதிய முரண்பாடு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
ஆசிரியர்கள் இடையேயான ஊதிய முரண்பாட்டை சரிசெய்வ தற்கான வழிகாட்டு நெறிமுறை களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப் பிய சுற்றிக்கை விவரம்:
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் வரும் அனைத்து நிலை ஆசிரியர்கள், பணியாளர்களில் மூத்தோர், இளையோர் ஊதிய முரண்பாட்டை சரிசெய்வதற்கான பரிந்துரைகளை மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பணியில் மூத்தவரின் ஊதிய முரண்பாடு சரிசெய்ய, சார்ந்த அலுவலர் நிலையிலேயே ஆய்வுசெய்து உரிய விதிகளின்படி பரிந்துரை அனுப்ப வேண்டும்.
பணியில் மூத்தவர் மற்றும் இளையவர் இருவரின் பதவி உயர் வுக்கான முன்னுரிமை பட்டியல் எந்த பக்கமும் விடுபடாமல், சார்ந்த அலுவலர்கள் கையொப்பமிட வேண்டும். ஏற்கெனவே ஊதிய முரண்பாடு சமன் செய்து உத்தரவு வழங்கப்பட்டிருந்தால், அது குறித்த நகல்களை கருத்துகளுடன் இணைத்து அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பரிந்து ரைகளை அனுப்ப வேண்டும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD வழிகாட்டு நெறிமுறை PDF

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.