அரசு சார்பில் அக்.28-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، أكتوبر 26، 2023

Comments:0

அரசு சார்பில் அக்.28-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்



சென்னையில் அரசு சார்பில் அக்.28-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் 100 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் சென்னை மாவட்டத்தின் 3-வது மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்,அக்.28-ம் தேதி சைதாப்பேட்டை, ஜோன்ஸ் சாலையில் அமைந்துள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 8 முதல்மாலை 3 மணிவரை நடைபெறுகிறது. இந்த முகாமில், 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறைநிறுவனங்கள் பங்கேற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.

இதில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல்12-ம் வகுப்பு தேர்ச்சி வரை, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, தொழிற்கல்வி பட்டயம், பொறியியல்பட்டம் பெற்றவர்கள், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்துவித தகுதியுள்ளவர்கள் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.

இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவசதிறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்டமுன்னோடி வங்கியின் வாயிலாகவங்கிகடன் வழிகாட்டுதல்கள் ஆகியன வழங்கப்படுகிறது. தனியார் துறையில் பணியாற்ற ஆர்வமாக உள்ள அனைவரும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.. தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தப்படுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

மேலும், இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை நேரிலோ 044-24615160 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ pjpsanthome@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة