ரூ 52 ஆயிரம் சம்பளம்...! திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வேலைவாய்ப்பு.. - விண்ணப்பிக்க கடைசி நாள் - 30.10.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، أكتوبر 07، 2023

Comments:0

ரூ 52 ஆயிரம் சம்பளம்...! திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வேலைவாய்ப்பு.. - விண்ணப்பிக்க கடைசி நாள் - 30.10.2023

Rs 52 thousand salary...! Employment in Tiruchendur Subramania Swamy Temple.. ரூ 52 ஆயிரம் சம்பளம்...! திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வேலைவாய்ப்பு..

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ள இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களின் விவரங்கள்

பணி விவரம்:

உதவி மின் கம்பியாளர்

கல்வித் தகுதி

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின்/ மின் கம்பி பணியாளர் தொழில் பயிற்சி நிறுவன சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து ‘H' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

இதற்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு Pay Matric Level 18-ன் படி ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

இதர நிபந்தனைகள்

இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு குறித்து தெரிவிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் கிடையாது.


அஞ்சலில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,
திருச்செந்தூர் -
628215,
தூத்துக்குடி மாவட்டம்.


தொலைப்பேசி எண் : 04639-242221.

https://hrce.tn.gov.in/hrcehome/index.php - என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 30.10.2023 மாலை 05.45 மணி வரை

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة