மாநகராட்சி பள்ளியில் கல்வி அமைச்சர் ஆய்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أكتوبر 15، 2023

Comments:0

மாநகராட்சி பள்ளியில் கல்வி அமைச்சர் ஆய்வு

மாநகராட்சி பள்ளியில் கல்வி அமைச்சர் ஆய்வு Education Minister Inspection of Corporation School

மதுரை சுந்தரராஜபுரம்மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கல்வி அமைச்சர் மகேஷ் ஆய்வு செய்தார்.பள்ளியில் 6ம் வகுப்புக்கு சென்ற அமைச்சர் மாணவர்களை வாசிக்க கேட்டு வாசிப்பு திறனை ஆய்வு செய்தார். பள்ளி வளாகத்தில் சி.எஸ்.ஆர்.,நிதியில் கட்டப்பட்டு வரும் கழிப்பறை மற்றும் இயற்பியல் ஆய்வகம், ஸ்மார்ட் ரூம்மை பார்வையிட்டார்.பள்ளி அருகே ரயில்வே டிராக் இருப்பதால் மாணவர் சேர்க்கை குறைவதாக கூறி மேம்பாலம் அமைக்கவும், விளையாட்டு மைதானம்ஏற்படுத்தி தரவும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்து, பள்ளி செயல்பாடுகளை பாராட்டினார்.உடன் இணை இயக்குநர் ஸ்ரீதேவி, சி.இ.ஓ., கார்த்திகா, தலைமையாசிரியை முனியம்மாள் உடனிருந்தனர். அமைச்சரின் விசிட் குறித்து மேயர், கமிஷனர், கவுன்சிலருக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.பின்னர் கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் செயல்பாடுகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.நுாலகத்திற்கு வருகை தந்த மாணவர்கள், இளைஞர்களிடம் நுாலகத்தின் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். இணை இயக்குநர் அமுதவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة