College field trip - பிளஸ் 2 மாணவர்களுக்கு நவ.6 முதல் கல்லூரி களப்பயணம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، أكتوبر 16، 2023

Comments:0

College field trip - பிளஸ் 2 மாணவர்களுக்கு நவ.6 முதல் கல்லூரி களப்பயணம்



பிளஸ் 2 மாணவர்களுக்கு நவ.6 முதல் கல்லூரி களப்பயணம் College field trip for Plus 2 students from Nov. 6

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், அருகே உள்ள கல்லூரிகளுக்கு கடந்தாண்டு களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த அனுபவம் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த அச்சம், குழப்பங்களை களைய வழிவகை செய்தது. தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டும் அரசுப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி களப்பயணம் நிகழ்வை அக்டோபர் 25 முதல்28-ம் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது நிர்வாகக் காரணங்களால் இந்த பயணம் நவம்பர் 6 முதல் 9-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு பள்ளிக்கு 35 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் அங்குள்ள நூலகம், ஆய்வகங்களை பார்வையிடுவார்கள். மேலும், கல்லூரிகளில் உள்ள இளநிலை படிப்புகள், கல்வி உதவித்தொகை திட்டங்கள்குறித்து விளக்கம் தரப்படும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة