தாம்பரம் - சென்னை இடையே நாளை (அக்.31) மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளால், கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூா் - விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள பரங்கிமலை பணிமனையில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் ரயில்கள் காலை 10.18 முதல் பிற்பகல் 2.45 மணி வரையிலும், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள் காலை 9.08 முதல் பிற்பகல் 3.20 மணி வரையிலும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள் காலை 11 முதல் பிற்பகல் 2.20 மணி வரையிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், காஞ்சிபுரம் (காலை 9.30), திருமால்பூரில் (காலை 11.05) இருந்து புறப்படும் ரயில்களும் செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு (காலை 10) புறப்படும் ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்கும், பயணிகளின் வசதிக்காகவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், பச்சை மற்றும் நீல வழித்தடங்களில் நாளை (அக்.31) கூடுதல் மெட்ரோ ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளது.


ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.