பள்ளிக்கல்வி துறையில் ஆசிரியர்களுக்கு வரும் புதிய திட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، أكتوبر 17، 2023

Comments:0

பள்ளிக்கல்வி துறையில் ஆசிரியர்களுக்கு வரும் புதிய திட்டம்

பள்ளிக்கல்வி துறையில் ஆசிரியர்களுக்கு வரும் புதிய திட்டம் | Teacher



ஆசிரியர்களுக்கு அரசின் அடுத்த திட்டம்:- ஒரு பிரத்யேக இணையதளம் வாயிலாக ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அவற்றுக்கு தீர்வு காண புதிய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரர் புதிய முயற்சி என்ற தகவல்களை அறிய முடிகிறது.

ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய குறைகளை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

கோரிக்கைகள் ஏற்கப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? அதற்கான காரணம் என்ன? பரிசீலனையில் உள்ளதா? அல்லது மனுவில் ஏதேனும் குறைகள் உள்ளதா என்று இணையதளம் வாயிலாக முழுக்க முழுக்க ஆசிரியர்களினுடைய GREIVENCES இனி நடைபெற அரசு திட்டம் வகுத்துள்ளதாக தகவல்கள். எனவே ஒரு அலுவலகத்தில் ஆசிரியரிடம் இருந்து மனு பெறப்பட்ட நாள் அதனை அலுவலர்கள் அதன் மீது எடுத்த நடவடிக்கைகளை வெளிப்படுத்தன்மையுடனும் ஆதாரத்துடனும் நாள்வாரியாக அது பதியப்படும் என்பதால் இது எதிர்காலத்தில் பல்வேறு வழக்கு சிக்கல்களை தவிர்க்கும் என்று அரசு கருதுகிறது. மேலும் இதன்மூலம் எந்த ஒரு அதிகாரியும் ஆசிரியர்களின் மனுக்களை அலட்சியப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் 5000 க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த முடிவை அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் எடுத்துள்ளதாக தெரிய வருகிறது. ஆசிரியர்கள் மத்தியில் இதற்கு பெரும் வரவேற்பும் உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة