தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 417 அப்ரன்டிஸ் பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.10.2023. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، أكتوبر 07، 2023

Comments:0

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 417 அப்ரன்டிஸ் பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.10.2023.





417 Apprentice Training in Tamilnadu Government Transport Corporation - Last Date to Apply: 10.10.2023. - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 417 அப்ரன்டிஸ் பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.10.2023.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் செயல்படும் விழுப்புரம், கோவை, நாகர்கோவில், சென்னை, சேலம், தர்மபுரி, நெல்லை மாவட்ட பணிமனைகளில் பொறியியல் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ/பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் கலை அறிவியல் பாடங்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ஒரு வருட அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்படுகிறது.

பயிற்சி விவரம்:

1Graduate Apprentices (Engineering):

மொத்த காலியிடங்கள்: 150. உதவித் தொகை ₹9,000. தகுதி: பி.இ., பி.டெக்., படித்திருக்க வேண்டும்.

2Graduate Apprentice (Non-Engineering):

மொத்த காலியிடங்கள்: 82. உதவித் தொகை ₹9,000. தகுதி: ஏதாவதொரு பி.ஏ.,/பிஎஸ்சி/பி.காம்/பிபிஏ/பிசிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3Diploma Apprentice (Technician Apprentices). மொத்த காலியிடங்கள்: 185. உதவித் தொகை : ₹8,000. தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங். 2019, 2020, 2021, 2023, 2023ம் கல்வியாண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள், தற்போது பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

பட்டப்படிப்பு, டிப்ளமோவில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். www.boat.srp.com என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பதாரரின் தகுதி மற்றும் இதர விவரங்களை முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த இணையதளத்தில் வழங்கப்படும் Unique Enrolment Number ஐ பயன்படுத்தி, அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் Top Down Button ஐ கிளிக் செய்து, அதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.10.2023.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة