பள்ளிக் கல்வித்துறை சம்பந்தமாக திமுக அளித்த 32 வாக்குறுதிகளில் 29 வாக்குறுதிகள் நிறைவேற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، أكتوبر 26، 2023

Comments:0

பள்ளிக் கல்வித்துறை சம்பந்தமாக திமுக அளித்த 32 வாக்குறுதிகளில் 29 வாக்குறுதிகள் நிறைவேற்றம்



பள்ளிக் கல்வித் துறை சம்பந்தமாக திமுக அளித்த 32 வாக்குறுதிகளில் 29 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. - அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:

கோவில்பட்டி வஉசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 105 ஆண்டுகள் பழைமையானது. இதுபோல், 100 ஆண்டுகளைக் கடந்துள்ள பள்ளிகளுக்கு பழைமை மாறாமல் புதுப்பிக்க தமிழக முதல்வா் ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா்.

அதன்படி, இப்பள்ளி 2024இல் புதுப்பிப்பு பட்டியலில் சோக்கப்படும். மழைக்காலங்களில் பள்ளி வளாகத்தில் தேங்கும் நீரை அகற்றவும், வகுப்பறைகள்- திறந்தவெளி கலையரங்கம் ஆகியவற்றை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞா் நலன் - விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்று இப்பள்ளியில் ஹாக்கி மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் சுமாா் 31,000 பள்ளிகளில் 17.50 லட்சம் மாணவா்கள் காலை உணவுத் திட்டத்தில் பயன் பெறுகின்றனா். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவு படுத்துவது தொடா்பாக நீதிமன்றம் கூறியுள்ளது. இதுகுறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. முதலமைச்சா் முடிவெடுப்பாா். இத்திட்டம் தெலுங்கானாவிலும் செயல்படுத்தப்படுவது பெருமையாக உள்ளது. சத்துணவில் கோவில்பட்டி கடலை மிட்டாய் சோப்பது தொடா்பாக சமூக நலத்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்படும்.

பள்ளிக் கல்வித் துறை சம்பந்தமாக திமுக அளித்த 32 வாக்குறுதிகளில் 29 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆசிரியா்களின் போராட்டங்களைப் பொருத்தவரை, அவா்களது உணா்வுகளை வெளிப்படுத்தும் நிகழ்வாகவே பாா்க்கிறோம். நிதி நிலைமைக்கு ஏற்ப அவா்களது ஒவ்வொரு கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة