நேர்முகத்தேர்விற்கான புதிய நடைமுறைகள் TNPSC வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 16, 2023

Comments:0

நேர்முகத்தேர்விற்கான புதிய நடைமுறைகள் TNPSC வெளியீடு

நேர்முகத்தேர்விற்கான புதிய நடைமுறைகள் TNPSC வெளியீடு

தேர்வாணையத்தால் நடத்தப்படும் நேர்முகத்தேர்விற்கான புதிய நடைமுறைகள் தொடர்பான செய்தி வெளியீடு..

அரசு பணிகளுக்கான நேர்முக தேர்வு முறையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், புதியமாற்றங்களை செய்து உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு பணியாளர்களை தேர்வு செய்வதில், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த, பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.அதன்படி, நேர்முக தேர்வுகளுக்கு அனுமதிக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பெயர், நிழற்படம், பிறந்த தேதி போன்ற அடையாளங்கள் மறைக்கப்படும்.அதற்கு பதில், விண்ணப்பதாரர்களுக்கு ஏ, பி, சி, டி என்ற ஆங்கில எழுத்து முறைப்படி, நேர்காணல் அறையில் அனுமதிக்கப்படுவர்.

இதில் வரிசை மாற்று முறையும் பின்பற்றப்படும். இதனால், விண்ணப்பதாரர்கள் மீது, சார்புத்தன்மை ஏற்படும் வாய்ப்புகள் நீக்கப்படும்; வெளிப்படைத்தன்மை அதிகரிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TNPSC Press News - 15.09.2023

Click here நேர்முக தேர்வில் அடையாளம் மறைக்கப்பட்டு புதிய நடைமுறை: டி.என்.பி.எஸ்.சி.

சென்னை: அரசு பணியாளர் தேர்வுக்கான நேர்முக தேர்வில் புதிய நடைமுறை பின்பற்றப்படும் என டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்து உள்ளது இது குறித்து டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:

அரசு பணியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடர்பான நடைமுறைகள் வெளிப்படை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் விதமாக புதிய நடைமுறை பின்பற்ற உள்ளது.

இதன்படி நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்படும் விண்ணப்பதார்களின் பெயர் , படம் பிறந்த தேதி உள்ளிட்ட ஆடையாளங்கள் மறைக்கப்படும்.

அதற்கு பதிலாக விண்ணப்பதாரர்களை ஏ.பி.சி.டி., முதலிய எழுத்துக்களை கொண்டு குறியீடு செய்து நேர் காணலுக்கு அனுமதிக்கப்படுவர்.

புதிய நடைமுறையுடன் ஏற்கனவே இருந்த ரேண்டம் சப்ளிங் முறையையும் பின்பற்ற உள்ளது.

இதன்மூலம் விண்ணப்பதாரர்களின் மீதான சார்புத்தன்மை ஏற்படும் வாய்ப்புக்கள் நீக்கப்படுவதுடன் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கப்படும் என அவை தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews