பதிவு எண் கிடைக்காததால் சித்தா மாணவர்கள் அவதி
சித்தா மருத்துவ மாணவர்கள் விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில், அதற்கு பதிவு எண் கிடைக்காததால், பயிற்சி பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை கீழ் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் பி.எஸ்.எம்.எஸ்., என்ற சித்தா மருத்துவத்தை மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், 2018 - 19ம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்கள் ஐந்தாண்டு முடித்துள்ளனர்.பயிற்சி மருத்துவராக பணியாற்றுவதற்கு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை இயக்குனரகத்தில் விண்ணப்பித்துள்ளனர். அதற்கான பதிவு கிடைக்க காலதாமதம் ஆவதால், முதுநிலை மருத்துவம் மற்றும் அரசு பணிக்கான எம்.ஆர்.பி., தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறியதாவது:மருத்துவம் படிக்கும் மாணவர்கள் ஒரு ஆண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்ற வேண்டும். அந்த வகையில், பதிவு எண் அளித்தால் மட்டுமே, நாங்கள் பயிற்சி டாக்டராகவும், முதுநிலை மருத்துவம் மற்றும் இதர தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவும் முடியும்.ஆனால், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை தொடர்ந்து காலதாமதம் ஏற்படுத்தி வருகிறது. பலமுறை கேட்டாலும் உரிய பதில் தர மறுக்கின்றனர். இந்த விவகாரத்தில் உயரதிகாரிகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.