டெங்குவுக்கு பள்ளிச் சிறுமி பலி!
மேற்குவங்கத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் பெயர் டோனா தாஸ் என்பது தெரிய வந்துள்ளது. அவர் கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பகுதியைச் சேர்ந்தவர். 7 ஆம் வகுப்பு படித்து வரும் அவர் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 24) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு காய்ச்சல் இருந்ததால் வீட்டிலிருந்துள்ளார். அவர் உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவரது உயிரை காப்பாற்றியிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவத் துறையில் மூத்த அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டபோது, டெங்கு காய்ச்சல் பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.