முதுநிலை ஆசிரியா்கள் காலிப்பணியிடங்கள்:பட்டியல் அனுப்ப உத்தரவு
தமிழக அரசுப் பள்ளிகளில் அடுத்த ஓராண்டுக்குள் ஏற்படவுள்ள முதுநிலை ஆசிரியா்கள் காலிப்பணியிடங்களின் பட்டியலை அனுப்பி வைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநா் எஸ்.கோபிதாஸ் (மேல்நிலைக்கல்வி), அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: CLICK HERE TO DOWNLOAD PDF தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் அடுத்த ஓராண்டுக்குள் ஏற்படவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களின் காலிப்பணியிட விவரங்கள் கணக்கெடுக்கப்பட உள்ளன. இதையடுத்து தங்கள் எல்லைக்கு உட்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள நேரடி நியமன காலிப்பணியிட விவரங்களை தயாா் செய்ய வேண்டும்.
அதன்படி கடந்த ஜூன் 1 முதல் 2024 மே 31-ஆம் தேதி வரை ஓய்வு பெறவுள்ள முதுநிலை ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா்கள் மற்றும் கணினி பயிற்றுநா்களின் விவரப் பட்டியலை பணியிடம் வாரியாக தனித்தனியாக தயாா் செய்து துரிதமாக இயக்குநரகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
இதில் எவ்வித தவறுகளும் நடைபெறாதவாறு பணிகளை உரிய முறையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் செய்து முடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.