ரூ.37.24 லட்சம் செலவில் கல்லூரி மாணவா்களுக்கு HIV விழிப்புணா்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 25, 2023

Comments:0

ரூ.37.24 லட்சம் செலவில் கல்லூரி மாணவா்களுக்கு HIV விழிப்புணா்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

கல்லூரி மாணவா்களுக்கு ஹெச்ஐவி விழிப்புணா்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு ஹெச்ஐவி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற இளைஞா் திருவிழா மற்றும் மாநில அளவிலான ரெட் ரன் மாரத்தான் போட்டியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கடந்த சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கம், பரிசுத்தொகையை அவா் வழங்கினாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் 22.4.1994-இல் தொடங்கப்பட்டது.

தமிழக அரசு வழங்கிய ரூ.25 கோடி நிதியிலிருந்து பெறப்பட்ட வட்டித் தொகையை கொண்டு ஹெச்ஐவி, எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக்கு உதவி, ஊட்டச்சத்து மிக்க உணவுக்காக செலவிடப்பட்டு வருகிறது. தாயிடமிருந்து குழந்தைகளுக்கு ஹெச்ஐவி தொற்று பரவுவதைத் தடுக்க 2,962 நம்பிக்கை மையங்கள் செயல்படுகின்றன. தமிழகம் முழுவதும் 34 ஆற்றுப்படுத்துதல் மையங்கள், 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், 64 சிகிச்சை மையங்கள் இயங்குகின்றன.

கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 11,51,142 பொதுமக்களுக்கும், 44,48,784 கா்ப்பிணிகளுக்கும் ஹெச்ஐவி ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ரூ.37.24 லட்சம் செலவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஹெச்ஐவி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews