காமன்வெல்த் மாஸ்டர்ஸ் உதவித்தொகை - விண்ணப்பிக்க கடைசி நாள் 17.10.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 29, 2023

Comments:0

காமன்வெல்த் மாஸ்டர்ஸ் உதவித்தொகை - விண்ணப்பிக்க கடைசி நாள் 17.10.2023



Commonwealth Masters Scholarship – Last date to apply is 17.10.2023 - காமன்வெல்த் மாஸ்டர்ஸ் உதவித்தொகை - விண்ணப்பிக்க கடைசி நாள் 17.10.2023

காமன்வெல்த் மாஸ்டர்ஸ் உதவித்தொகை

இந்த உதவித்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், யு.கே., கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் முழுநேர முதுநிலை பட்டப்படிப்பை இலவசமாக மேற்கொள்ள முடியும். யு.கே.,வின் காம்ன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷன் வழங்கும் இந்த திட்டம், செப்டம்பர் / அக்டோபர் 2024 முதம் துவங்கும் படிப்புகளுக்கு பொருந்தும்.

தகுதியுள்ள கருப்பொருள்கள்:

வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சுகாதார அமைப்புகள் மற்றும் திறனை வலுப்படுத்துதல் உலகளாவிய செழிப்பை ஊக்குவித்தல் உலக அமைதி, பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துதல் திறனை வலுப்படுத்துதல் மற்றும் நெருக்கடிகளை சமாளித்தல்

* அணுகல், சேர்த்தல் மற்றும் வாய்ப்புகள் தகுதிகள்:

இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். இந்தியாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். யு.கே., கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ள உரிய தகுதி பெற்றவராக இருப்பதுடன், செப்டம்பர் / அக்டோபர் 2024 சேர்க்கை பெற தயாராக இருக்க வேண்டும்.

* செப்டம்பர் 2023க்குள், குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.

* இரண்டாவது யு.கே., முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு சி.எஸ்.சி., நிதி அளிப்பதில்லை. எனினும், அதன் அவசியம் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அவை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் நிதி உதவி அளிக்கப்படலாம்.

* எம்.பி.ஏ., படிப்பிற்கு நிதி உதவி அளிக்கப்படுவதில்லை. விண்ணப்பிக்கும் முறை:

காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷனின் https://fs29.formsite.com/m3nCYq/omxnv2g3ix/index எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைன் விண்ணப்பபதோடு, இந்திய கல்வி அமைச்சகத்தின் https://proposal.sakshat.ac.in/scholarship/ எனும் சாக்சாத் இணையதளத்திலும் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

காமன்வெல்த் உதவித்தொகை கமிஷனின் இணையதளம் வாயிலாக 17 அக்டோபர் 2023 வரையிலும், இந்திய கல்வி அமைச்சகத்தின் இணையதளம் வாயிலாக 25 நவம்பர் 2023 வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

விபரங்களுக்கு: www.education.gov.in

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews