விண்ணில் சீறிப் பாய்ந்தது PSLV C57 - ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் சீறிப் பாய்ந்தது PSLV C57 ராக்கெட்!
சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா-எல் 1-ஐ இது சுமந்து செல்கிறது!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆதித்யா-எல்1... நாளொன்றுக்கு 1,440 புகைப்படங்களை அனுப்பும் 100-120 நாட்கள் பயணித்து எல்1 சுற்று வட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா எல்1. இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலனான இது, சூரியனை ஆய்வு செய்ய, இன்று காலை 11:50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ரூ.423 கோடி செலவில் விண்ணில் ஏவப்பட்ட ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு நடத்த உள்ளது.
இந்த விண்கலம், சுமார் 400 கிலோ எடை கொண்டதாகும். சூரியனின் வெளிப்புற வெப்பச் சூழல், கதிர் வீச்சு, காந்தப் புலம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது. ஆதித்யா எல்-1 விண்கலம், 127 நாட்களில் 15 லட்சம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு ‘லெக்ரேஞ்சியன் 1’ புள்ளியில் நிலை நிறுத்தப்பட இருக்கிறது. அங்கிருந்தபடி சூரியன் பற்றிய ஆய்வுப்பணியை தொடங்க இருக்கும் ஆதித்யா எல்-1, சூரியனை நாள் ஒன்றுக்கு 1,440 புகைப்படங்களை எடுத்தனுப்பும் திறன் கொண்டது. நாம் சூரியனில் இருந்து 14 கோடியே 85 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பின்தங்கி இருந்தாலும், ஆதித்யா எல்-1-ல் இருக்கும் சக்தி வாய்ந்த தொலைநோக்கி (டெலஸ்கோப்) கருவிகள், சூரியனை அருகில் இருந்து பார்ப்பது போன்ற பிரமாண்டத்தை காட்டும்.
இந்த விண்கலத்தில் உள்ள 7 அதிநவீன கருவிகள், சூரியனின் ஒளிக்கோளம், குரோமோஸ்பியர், வெளிப்புற அடுக்கு உள்ளிட்டவைகளை துல்லியமாக ஆய்வு செய்யும். ஆதித்யா எல்-1-ன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என்பதால், அதுவரை இடைவிடாமல் ஆய்வு பணியை மேற்கொள்ளும்.
ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான 24 மணிநேர கவுண்டவுன் நேற்றுத் தொடங்கிய நிலையில் சரியாக இன்று காலை 11.50க்கு விண்ணில் பாய்ந்தது. ஆதித்யா எல்1 சோதனையை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.