தமிழக அரசின் பொதுப் பாடத்திட்டம்: பல்கலை.கள், கல்லூரிகளுக்கு ஆளுநரின் அறிவுறுத்தல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 22, 2023

Comments:0

தமிழக அரசின் பொதுப் பாடத்திட்டம்: பல்கலை.கள், கல்லூரிகளுக்கு ஆளுநரின் அறிவுறுத்தல்!

தமிழக அரசின் பொதுப் பாடத்திட்டம் அவசியமில்லை: பல்கலை.கள், கல்லூரிகளுக்கு ஆளுநா் ஆா். என். ரவி அறிவுறுத்தல்

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மாநில அரசின் பொதுப் பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என ஆளுநா் ஆா். என். ரவி தெரிவித்துள்ளாா்.

தமிழக அரசின் பொதுப் பாடத்திட்டத்தை தன்னாட்சிக் கல்லூரிகளிலும் அமல்படுத்துவது தொடா்பாக தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரி முதல்வா்களுடன் உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அண்மையில் ஆலோசனை நடத்தினாா். அந்தக் கூட்டத்தில் ஒருசில கல்லூரிகளின் முதல்வா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், பொதுப் பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து தன்னாட்சிக் கல்லூரிகள் தங்கள் விருப்பத்துக்கேற்ப முடிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழங்களின் துணைவேந்தா்கள், கல்லூரி முதல்வா்களுக்கு ஆளுநா் ஆா். என். ரவி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசின் உயா் கல்வித் துறையானது கலை, அறிவியல் கல்லூரிகள் அனைத்தும் பொதுப் பாடத் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று வலிந்து நிா்ப்பந்திப்பது தொடா்பாக பல்வேறு கல்வியாளா்கள், பல்கலைக்கழக துணைவேந்தா்கள், கல்லூரி முதல்வா்கள், தன்னாட்சிக் கல்வி நிறுவனங்களின் நிா்வாகத்தினா் தங்கள் கவலையை எனது கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனா்.

அதாவது, மாநில அரசின் பொதுப் பாடத் திட்டம் கொண்டுவரப்படும்போது கல்விச் சுதந்திரம் பாதிக்கப்படும். இது கல்வியின் தரத்தைக் குறைக்கும்; தேசிய அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம்பெறுவதும் பாதிப்புக்குள்ளாகும். மேலும், அகில இந்திய அளவில் ஆரோக்கியமான போட்டிச் சூழலுடன், கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் இடம் பெறுவதையும் இது பாதிக்கும். இதுபோன்ற நியாயமான கோரிக்கைகள் குறித்து பரீசீலிக்கப்பட்டுள்ள நிலையில், உயா் கல்வி என்பது மாநில அரசின் வரம்புக்கு அப்பாற்பட்டு, மத்திய அரசின் பொதுப் பட்டியலில் உள்ளது. அதாவது, கல்லூரிகளின் பாடத் திட்டத்தைக் கண்காணிக்கும் அமைப்பாக பல்கலைக்கழக மானியக் குழுவே உள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தில் சட்டமும் இயற்றப்பட்டு யுஜிசிக்கு உரிய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவை பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) கட்டுப்பட்டவையாகும். அதன் ஆளுகைக்கு உள்பட்டே பாடத் திட்டங்கள் வரையறுக்கப்படுகின்றன. குறித்த கால இடைவெளியில் பாடத் திட்டங்கள் தொடா்பாக கல்வி கவுன்சில் மற்றும் நிா்வாக கவுன்சில் ஒப்புதல் பெற்று முடிவெடுக்கும் அதிகாரம் படைத்ததாக யுஜிசியே உள்ளது.

எனவே, தமிழக அரசின் பொதுப் பாடத் திட்டம் என்பது எந்த யுஜிசியின் வரம்புக்கு உள்பட்டது இல்லை. எனவே, கல்லுாரிகள், பல்கலைக்கழங்கள், தன்னாட்சிக் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைக்கும் பாடத்திட்டத்திலேயே பாடங்களை நடத்தலாம். தமிழக அரசின் உயா் கல்வித் துறை கொண்டுவரும் பொதுப் பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ள

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews