தமிழக அரசின் வேலைவாய்ப்பு பயிற்சி துறையில் வேலை - கடைசி தேதி: 16.8.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، أغسطس 07، 2023

Comments:0

தமிழக அரசின் வேலைவாய்ப்பு பயிற்சி துறையில் வேலை - கடைசி தேதி: 16.8.2023

தமிழக அரசின் வேலைவாய்ப்பு பயிற்சி துறையில் வேலை - கடைசி தேதி: 16.8.2023 Tamil Nadu Govt Employment Training Department Job - Last Date: 16.8.2023

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப் பணியில் அடங்கிய உதவி பயிற்சி அலுவலர்(சுருக்கெழுத்து-ஆங்கிலம்) மற்றும் தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினிவழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 16 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: 663 அறிக்கை எண்: 14/2023

பதவி: உதவி பயிற்சி அலுவலர்(சுருக்கெழுத்து-ஆங்கிலம்)

காலியிடங்கள்: 2

சம்பளம்: ரூ.35,900 - 1,31,500

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் முதுநிலை தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதவி: இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்

காலியிடங்கள்: 5

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,30,400

தகுதி: கைத்தறி தொழில்நுட்பம் (Handloom Technology) பிரிவில் டிப்பளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2023 தேதியின்படி பொது பிரிவினர் 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு வயதுவரம்பில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கணினி வழித் தேர்வு, திறன் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி. திருநெல்வேலி, வேலூர். விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.8.2023 மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة