தெற்கு ரயில்வேயில் 15,240 பணியிடங்கள் காலி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 21, 2023

Comments:0

தெற்கு ரயில்வேயில் 15,240 பணியிடங்கள் காலி!

தெற்கு ரயில்வேயில் 15,240 பணியிடங்கள் காலி

தெற்கு ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் உள்ள, 15,240 காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால், கூடுதல் பணி சுமையால் அவதிப்படுவதாக, ரயில்வே பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.கடந்த ஜூலை நிலவரப்படி, இந்திய ரயில்வேயில், 2,61,233 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

அதிகபட்சமாக, வடக்கு ரயில்வே - 32,468, கிழக்கு ரயில்வே - 29,869, மேற்கு ரயில்வே - 25,597, மத்திய ரயில்வே - 25,281 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து, தெற்கு ரயில்வேயில் மொத்தம் உள்ள 97,000 பணியிடங்களில், 15,240 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கூடுதல் சுமைரயில் ஓட்டுனர், நிலைய அதிகாரிகள், டிக்கெட் பரிசோதகர்கள், கிளார்க், பாயின்ட் மேன், மெக்கானிக் என பல்வேறு பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் உள்ளன.இதுகுறித்து, ரயில்வே பணியாளர்கள் சிலர் கூறியதாவது:

எங்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்பட்டுள்ளது.

விடுப்பு இன்றி பணியாற்றுவதால், உடல் சோர்வு ஏற்பட்டு, உடல் நலம் பாதிக்கப்படுகிறது. முன்பெல்லாம் எங்களுக்கு வார விடுமுறையும், மற்ற விடுமுறையும் தடையின்றி கிடைக்கும். இப்போது விடுப்பு கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. கூடுதல் பணி பளுவால், கவனக்குறைவும் ஏற்படுகிறது. இதனால், ரயில் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. எனவே, காலிப்பணியிடங்களை நிரப்புவதில் இனியும் அலட்சியம் காட்டாமல், ரயில்வே உடனடியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.நடவடிக்கைரயில்வே உயர் அதிகாரிகள் கூறியதாவது:

காலிப் பணியிடங்கள் நிரப்பும் பணிகள், கடந்த ஓராண்டாக நடந்து வருகின்றன. ரயில் ஓட்டுனர், நிலைய மேலாளர் உள்ளிட்ட சில பிரிவுகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

எஞ்சியுள்ள பணியிடங்களை படிப்படியாக நிரப்ப, ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews