பணப்பயன்கள் தாமதமாவதாக புகார்
'ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பணப்பயன்கள் கிடைப்பது தாமதமாகும்' என புகார் எழுந்துள்ளது.
அன்னுார் ஒன்றியத்தில், 75 துவக்க, 16நடுநிலை மூன்று உயர்நிலை, ஆறு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளில், 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
இங்கு ஓய்வு பெற்றவர்களுக்கு பல மாதங்களாகியும், இதுவரை பணப்பயன் கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, ஒட்டர்பாளையம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (ஓய்வு) சுப்ரமணியம் கூறுகையில்,
''ஓய்வு பெறும் நாளன்றே பணப்பயன்கள் தரவேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, அனைத்து சான்றுகளும் பெற்று கல்வி அலுவலகத்தில் வழங்கியும், இதுவரை பென்ஷன் கிடைக்கவில்லை.
மார்ச் மாதம் ஓய்வு பெற்றவர் களுக்கும் இதுவரை பென்ஷன் கிடைக்கப் பெறவில்லை.
மாவட்ட கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.