தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தோருக்கு போலீஸ் வேலை - செப்.,17ம் தேதி விண்ணப்பிக்க கடைசி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 08, 2023

Comments:0

தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தோருக்கு போலீஸ் வேலை - செப்.,17ம் தேதி விண்ணப்பிக்க கடைசி

10ம் வகுப்பு முடித்தோருக்கு போலீஸ் வேலை காத்திருக்கு..!

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 3,359 பதவிகளுக்கு பொதுத் தேர்வுக்கு, வரும் 18ம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாமென தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

காலி பணியிடங்கள் விவரம் :

காவல்துறை இரண்டாம் நிலை (ஆயுதப்படை (பெண்கள்) / சிறப்பு காவல் படை) - 2,599. சிறை மற்றும் சீர்திருத்தத்துறை - 86, தீயணைப்பாளர் - 674 என மொத்தம் 3,359 காலி பணியிடங்களுக்கு நேரடி தேர்வு நடைபெறுகிறது.

கல்வித்தகுதி :

குறைந்தபட்சம் 10ம் வகுப்பு / எஸ்.எஸ்.எல்.சி அல்லது அதற்கு சமமான கல்வித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பள விகிதம் :

ரூ.18,220 முதல் ரூ.67,100 வரை

வயது வரம்பு :

பொது விண்ணப்பதாரர்கள் 18 வயது நிறைவடைந்தவராகவும், 26 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனில் 28 வயதுக்கு மிகாதவராகவும், ஆதி திராவிடர்/ பழங்குடியினர்/ மூன்றாம் பாலினத்தவர் எனில் 31 வயதுக்கு மிகாதவராகவும், ஆதரவற்ற விதவைகள் எனில் 37 வயதுக்கு மிகாதவராகவும், முன்னாள் ராணுவத்தினர் எனில் 47 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

வாரிசுதாரர்களுக்கு பிரிவுகளுக்கு ஏற்ப வயது வரம்பில் சலுகை உண்டு.

இடஒதுக்கீடு :

வகுப்பு வாரி இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ள விதிகளின்படி பின்பற்றப்படும். தேர்வு நிலைகள் :

எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல்/ உடல்தகுதி தேர்வுகள் மற்றும் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி :

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

வரும் 18ம் ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். செப்.,17ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். எழுத்து தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்வு கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.250/-ஐ இணைய வழியிலோ அல்லது இணையமில்லா எஸ்.பி.ஐ வங்கியின் செலுத்துச்சீட்டு வழியாக செலுத்தலாம்.

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை :

பத்தாம் வகுப்பு வரை தமிழை பயிற்று மொழியாக கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு ஒவ்வொரு நிலையிலும், மொத்தபணியிடங்களில் தமிழ் வழியில் பயின்றோருக்கு 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews