நாதஸ்வரம், தவில் படிப்புகள் துவக்கம்
அரசு இசைக்கல்லுாரி களில், நாதஸ்வரம், தவில் ஆகிய பிரிவுகளில், இளங்கலை பட்டப்படிப்பு துவக்கப்பட்டுள்ளது.
இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.கலை பண்பாட்டுத் துறையின் கீழ், சென்னை, மதுரை, கோவை, திருவையாறு ஆகிய நகரங்களில், இசைக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், நடப்பு கல்வியாண்டு முதல், நாதஸ்வரம், தவில் பிரிவுகளில் பட்டப்படிப்பு துவக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவையாறு இசைக் கல்லுாரிகளில், நாதஸ்வரம், தவில் பிரிவுகளில், இளங்கலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, 17 வயதுக்கு மேற்பட்ட, ஆண், பெண் இரு பாலரும் சேரலாம்.இப்பிரிவுகளில் சேர விரும்புவோர், www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்; வரும் 31ம் தேதி கடைசி நாள். சம்பந்தப்பட்ட கல்லுாரிகளிலும் விண்ணப்பம் அளிக்கலாம்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.