ஊடகவியலாளர் சான்றிதழ் பயிற்சி - ஆகஸ்ட் 24ல் நுழைவுத் தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 12, 2023

Comments:0

ஊடகவியலாளர் சான்றிதழ் பயிற்சி - ஆகஸ்ட் 24ல் நுழைவுத் தேர்வு

ஊடகவியலாளர் சான்றிதழ் பயிற்சி

இளங்கலை/முதுகலை பட்டப்படிப்பு முடித்து விட்டு ஊடகத்தில் சாதிக்கும் ஆர்வம் கொண்டவரா நீங்கள்?

உங்களுக்கு ஒரு நல்வாய்ப்பு செய்தியாளர்/ஒளிப்பதிவாளர் செய்தி தயாரிப்பாளர் காட்சி தொகுப்பாளர்/டிஜிட்டல் செய்தியாளர் ஆகிய துறைகளில் ஒரு மாத கால பயிற்சி வழங்கப்படும் யார் விண்ணப்பிக்கலாம் ?

இளங்கலை/முதுகலையில் தமிழ்,ஆங்கிலம்,விஷுவல் கம்யூனிகேஷன்,இதழியல், சமூக பணி, வரலாறு ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் 2023-ம் ஆண்டு இளங்கலை அல்லது முதுகலை படிப்பு முடித்திருக்க வேண்டும்

எப்படி தேர்வு செய்யப்படுவீர்கள் ?

குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலில் வெற்றி பெறுபவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்

பணி வாய்ப்பு?

பயிற்சி காலத்தில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு நியூஸ் 7 தமிழில் பணி வாய்ப்பு வழங்கப்படும் தேர்வாகாதவர்களுக்கு பயிற்சிக்கான சான்றிதழ் தரப்படும்

எழுத்து தேர்வுக்கு தயாராவது எப்படி?

பொது அறிவு/ சமூகம், அரசியல் சார்ந்த செய்திகள் குறித்த கேள்விகள் இடம்பெறும்

நேர்முகத் தேர்வு?

நீங்கள் எந்த பிரிவை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களோ அது குறித்த கேள்விகள் இடம்பெறும்

நுழைவுத் தேர்வு நடைபெறும் இடம் - காந்தி மியூசியம், மதுரை நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 24

நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு நேர்காணல் ஆகஸ்ட் 25 நடைபெறும்

குறிப்பு - பயிற்சியில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு உண்டு

ஒரு மாத பயிற்சி காலத்திற்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்

நுழைவு தேர்வுக்கான ஹால் டிக்கெட்-ஐ பெற கீழ்காணும் E-MAILக்கு உங்களது சுய விவர குறிப்பை (Bin Data) அனுப்பிவையுங்கள்.

target@news7tamil.live

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews