ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள் - 05.09.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، سبتمبر 04، 2023

Comments:0

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள் - 05.09.2023



நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள வேலைவாய்ப்பு

பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

நீலகிரி உள்ள அலுவலகத்தில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

சமூக நல தனியாளர் (Case Worker) கல்வி மற்றும் பிற தகுதிகள்

சமூகப்பணி, ஆலோசனை உளவியல் அல்லது மனிதவள மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஒரு ஆண்டு தொண்டு நிறுவனங்கள், அரசு சார்ந்த திட்டங்களில் பணி புரிந்தவராகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒருவருடம் ஆலோசனை வழங்குவதில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

உள்ளூரில் வசிக்கும் பெண்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்முக உதவியாளார் பணிக்கு விண்ணப்பிக்க ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். சமையல் தெரிந்திருக்க வேண்டும்.

சென்னையைச் சேர்ந்த பெண்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க உள்ளூரில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

வழக்கு அலுவலர்கள் - ரூ.15,000

பன்முக உதவியாளர்- ரூ.6,400

தேர்வு செய்யப்படுவது எப்படி?

இந்த வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பதவிகளுக்கு உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சமூகநல அலுவலர்,

மாவட்ட சமூகநல அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகம்,

பிங்கர்போஸ்ட், உதகை -643006

தொலைபேசி எண் - 0423 -2443392

விண்ணப்பிக்க கடைசி நாள் - 05.09.2023

இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள
CLICK HERE TO DOWNLOAD PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة