31ல் சென்னை வாருங்கள் சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு
பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாக பணிகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்களுக்கு, நேரடி ஆலோசனை கூட்டம் நடத்தி தீர்வு காண, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக, வரும், 31ம் தேதி முதல், 2ம் தேதி வரை சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், கல்வி அதிகாரிகளுக்கான கூட்டம் நடக்கிறது.
பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ், செயலர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி மற்றும் இயக்குனர்கள், பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
இதற்காக, முதன்மை கல்வி அதிகாரிகள் சென்னைக்கு வருமாறு, பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.