B.Arch படிப்பு மாணவர் சேர்க்கை - ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் சேர்க்கையை உறுதி செய்ய உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 26, 2023

Comments:0

B.Arch படிப்பு மாணவர் சேர்க்கை - ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் சேர்க்கையை உறுதி செய்ய உத்தரவு!



பிஆர்க் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் 641 இடங்கள் நிரம்பின: 826 இடங்கள் காலியாக உள்ளன

பிஆர்க் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் 826 இடங்கள் காலியாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 37 கட்டிடவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் கட்டிட அமைப்பியல் (பி.ஆர்க்) படிப்புக்கு அரசுஒதுக்கீட்டில் 1,467 இடங்கள்உள்ளன.

இவை ஆண்டுதோறும் இணையதள கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

2,485 விண்ணப்பங்கள்: அதன்படி, நடப்பாண்டுசேர்க்கைக்கு 2,485 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் 1,449 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 13-ல்வெளியிடப்பட்டது. இதையடுத்து சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 17, 18-ம்தேதிகளில் நடைபெற்றது. இதில் 8 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. 28 பேர் அரசுப் பள்ளி மாணவர்:

அதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கியது. இதில் 981 மாணவர்கள் தங்க ளுக்கு பிடித்த கல்லூரிகளை தேர்வு செய்தனர். அதில் 842 பேருக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதை உறுதி செய்த 633 மாணவர்களுக்கு இறுதி ஒதுக் கீட்டு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில்28 பேர் அரசுப் பள்ளி மாணவர்களாவர்.

இந்த 633 மாணவர்களும் ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் நேரில் சென்று சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களை /barch.tneaonline.org/ எனும் வலைதளத்தில் அறியலாம்.

இதனிடையே, இந்தாண்டு பிஆர்க் படிப்பில் 641 இடங்களே நிரம்பியுள்ளன. 826 இடங்கள் காலியாக வாய்ப்புள்ளது. இறுதி நிலவரம் ஆகஸ்ட் 31-ம் தேதி தெரியவரும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews